இந்தநூலில் இடம்பெற்றுள்ள பதிவுகள் வெறுமனே கட்டுரைகளா? சிறுகதைகளுக்கான சிறுவிதைகளா அல்லது நடு இரவில் அடர் கனவின் இடையில் எழுந்து எழுதிவிட்டு தூங்கிய துண்டுப்பகடிகளா - என்று எதுவுமே தெரியவில்லை. புனைவுக்கும் புனைவில்லாத்தன்மைக்கும் இடையில் எழுத்துக்கள் என்னை இழுத்து விளையாடிய இனிய தருணங்கள் என்றுகூட சொல்லலாம். மினுங்கியபடி எல்லோரையும் மிரட்டிக்கொண்டிருக்கும் காலம் என்ற வாள் முனையில் எந்தப்பயமும் இல்லாமல் குதியாட்டம் போடுவதற்கு துணை தந்த இந்த எழுத்துக்களை நூல் வடிவில் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தெய்வீகன்
No product review yet. Be the first to review this product.